நாளை ஓணம்: கேரளம் சென்ற 22 டன் வாடாமல்லி பூக்கள்
திண்டுக்கல், ஆக.25
திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப்பட்டி, சுக்காம்பட்டி, கோமையன்பட்டி சுற்று வட்டார பகுதிகள், நிலக்கோட்டை பகுதிகளில் வாடாமல்லி பூக்கள் சாகுபடி ஆகிறது. கேரளத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் நாளை (ஆக.,26) கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு அம்மாநிலத்தின் கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு, பத்தனம்திட்டா, கோட்டயம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வாடாமல்லி கிலோ ரூ.60 என்ற விலையில் 22 டன் பூக்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இதுதவிர அம்மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திற்கு அனுப்ப தோவாளை பகுதிக்கு வாடாமல்லியுடன் இணைந்த துளசி கட்டுக்கள், பன்னீர் ரோஸ், பட்டன் ரோஸ், வெள்ளை செவ்வந்தி, மல்லி, செண்டுமல்லி பூக்கள் டன் கணக்கில் அனுப்பி வைக்கப்பட்டன.
திண்டுக்கல் பூ மார்க்கெட் வியாபாரி வேளாங்கன்னி ரீகன் கூறுகையில், ‘ஓணம் பண்டிகைக்கு வழக்கமாக வாடாமல்லி பூக்களை அதிகளவில் அனுப்பி வைப்போம். இன்று (நேற்று) 22 டன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வாடாமல்லி கிலோ ரூ.60, விருட்சிப்பூ ரூ.180, பன்னீர் ரோஸ் ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.250, செண்டுமல்லி ரூ.110, வெள்ளை செவ்வந்தி ரூ.110, மல்லி கிலோ ரூ.1300க்கு விற்பனையானது. இதுதவிர தேவையின் கருதி கோழிக்கோடு வியாபாரிகள் பூக்களை வாங்கிச்சென்றனர் என்றார்.
மேலும்
-
டிரைவர்களுக்கு மராத்தி கட்டாயம் என்ற விதி அமல்; மும்பையில் ஆட்டோ, டாக்சி கிடைக்காமல் மக்கள் அவதி
-
வெற்றி பெற்றதாக அறிவிக்க கோரி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு; அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு
-
பள்ளியில் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மாணவி; மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் ஐகோர்ட்
-
அமைச்சர் செங்கோட்டையன் vs இபிஎஸ் காரசார வாதம்
-
புதிய பஸ்கள் சேவை; துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
-
டில்லியில் கொட்டி தீர்த்த கனமழை; 166 விமானங்கள் தாமதம், 16 விமான சேவை ரத்து