டிரைவர்களுக்கு மராத்தி கட்டாயம் என்ற விதி அமல்; மும்பையில் ஆட்டோ, டாக்சி கிடைக்காமல் மக்கள் அவதி
மும்பை: மஹாராஷ்டிர அரசின் புதிய மராத்தி மொழி கட்டாய விதி அமலுக்கு வந்துள்ளதால், மும்பையில் வேலை பார்த்த டிரைவர்கள் பலர், சொந்த மாநிலம் திரும்பி செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் ஆட்டோ, டாக்சி இன்றி மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
ஆட்டோ, டாக்சி ஓட்டும் டிரைவர்கள் மராத்தி மொழியில் பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதியை மஹாராஷ்டிரா அரசு அமல் செய்துள்ளது. அதை அமல்படுத்தி வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ - டாக்சி டிரைவர்களுக்கு மஹாராஷ்டிர அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக, மும்பை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 3,995 டிரைவர்களிடம் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கான டிரைவர்களுக்கு ஒரு மாத கால அவகாசத்துடன் கூடிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
வேறு வழியில்லாத நிலையில், டிரைவர்கள் பலர், மராத்தி கற்கத் தொடங்கியிருப்பதாக படங்கள், வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அதேபோல, டிரைவர்கள், தங்கள் ஆட்டோ, டாக்சியுடன் சொந்த ஊர் செல்வதற்காக, ரயிலில் ஆட்டோவை ஏற்றுவது போன்ற படங்கள், வீடியோக்களும் வைரல் ஆகி வருகின்றன.
அரசின் மராத்தி கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து டிரைவர்கள் மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மும்பையில் ஆட்டோ, டாக்சி போக்குவரத்து முடங்கியுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
காலை மற்றும் மாலை நேர நெரிசலின் போது ஆட்டோ, டாக்சி கிடைக்காமல் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் இருந்து ரயில் நிலையங்களுக்குச் செல்லும் பாதைகளில் போக்குவரத்து கடுமையாக முடங்கியுள்ளது. பருவமழைக் காலத்தில் பயணிகள் வாகனம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
டிரைவர்கள் சொல்வது என்ன?
இது குறித்து டிரைவர்கள் கூறியதாவது: நாங்கள் சொந்த வாகனங்களை கொண்டிருக்கவில்லை. ஒப்பந்தக்காரர்களின் கீழ் பணிபுரிகிறோம். அவர்களின் தினசரி வருமானத்தில் ஒரு பங்கை வழங்குகிறார்கள். தினமும் நாங்கள் வருமானத்தை இலக்காக வைத்து ஓடி கொண்டு இருக்கிறோம்.
இந்த இக்கட்டான சூழலில் மற்றொரு மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும் கடினம். இதனால் அனைவரும் டிரைவர் பணியில் இருந்து, கூலி வேலை, மற்றும் தங்களுக்குக் கிடைக்கும் மற்ற வேலைகளுக்கு மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மொழி வெறி என்றால் என்னவென்று தெரியாமல் இங்கே தமிழர்களுக்கு எதிராக கூவி கொண்டு இருக்கும்
டிரைவர்களுக்கும் மராத்தி கட்டாயம் என்ற விதி வகுக்கப்பட்ட நாளில் இருந்து தான் அமுல் படுத்த முடியும். அதற்கு முன் உரிமம் பெற்றவர்களுக்கு பொருந்தாது.
அப்படி என்றால் பயணியும் கட்டாயம் மராத்தி அறிந்து இருக்க வேண்டும். இது எப்படி சோதித்து சாத்திய படுத்த முடியும். நான் மராட்டியத்தில் வேலை சேர்ந்த போது இந்தி, மராட்டி ஒரு வரி தெரியாது.
ஒரு மராத்தி ஆசிரியர் முதலில் இந்தி படி பின் மராத்தி கற்று தருகிறேன் என்றார். அரசியல் வாதிக்கும் வாழ வைக்கும் ஆசிரியருக்கும் உள்ள வித்தியாசம்.மேலும்
-
புதன் கிழமை சிறப்பு பக்கத்திற்கு... உளவுபிரிவுக்கு ஆள் தேடும் ‘போலீஸ்’
-
பதவி வேண்டி கோவில்களுக்கு படையெடுக்கும் உடன்பிறப்புகள்
-
குடியிருப்போர் குரல்.... ரோடு வசதி இன்றி மழைநீர் தேங்கி சகதிகாடாக மாறும் அவலம் தேனி நகராட்சி சிவாஜி நகர் விரிவாக்க பகுதி மக்கள் அவதி
-
ஓணம் வந்தல்லோ!
-
தென்மேற்கு பருவமழை தீவிரம் மேல்நீராறில் 101 மி.மீ., பதிவு
-
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் நெருக்கடி மன உளைச்சலால் ஆசிரியர்கள் அவதி