வெற்றி பெற்றதாக அறிவிக்க கோரி ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு; அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு
சென்னை: கொளத்தூரில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது.
சென்னை கொளத்துார் தொகுதியில், த.வெ.க., - எம்.எல்.ஏ., பாபு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி, தி.மு.க., வேட்பாளரும், அக்கட்சி தலைவருமான ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முறைகேடுகள் நடந்துள்ளதால், இரண்டாம் இடத்தில் உள்ள என்னை வெற்றி பெற்றதாகவும் அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 25) ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஸ்டாலின் தரப்பில் அவசர வழக்காக விசாரிக்க முன் வைக்கப்பட்ட கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்தது. வழக்கு அடுத்த வாரம் திங்கள் கிழமை ஆகஸ்ட் 31ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.
சிறப்பு வீடியோ
கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபு வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் வழக்கு: ஐகோர்ட் முக்கிய அறிவிப்பு என்ன; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
சமீபத்தில் தான் மறு எண்ணிக்கையில் மூக்கருபட்டு வந்தார். இப்போ மீண்டும் பதவி சுகம் தாளாமல் கெஞ்சுவது அசிங்கமான செயலாகவே மக்கள் பார்க்கிறார்கள்.
முன்னாள் முதல்வர். எப்படி வாழ்ந்தவர்.
பிரசர் போடறாங்களோ ?
ஏன் இந்த அடாவடி? நேர்மையாக ஒதுங்கி கொள்வதுதான் நல்ல தலைவனுக்கு அழகு. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று எடுத்துக் கொள்ள வேண்டும் .
இந்த வழக்குக்கு 2041ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்படும், பாபு வெற்றி பெற்றது சரி என்று.
பேப்பர் முதல்வராக உத்தரவிட வேண்டுகிறோம். டம்மி பாவா
வழக்கு நடக்கட்டும் தீர்ப்பு மக்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க வேண்டும் இனி மேல் இந்த விஷயத்தில் வழக்கு தொடர்ந்தால் இவரை தேர்தலில் நிற்க 20 ஆண்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவரின் இந்த நடத்தை தேர்தல் ஆணையத்தை கேவலப்படுத்தி உள்ளது. அதற்கு 100 கோடிகளை நஷ்ட ஈடாக தர உத்தரவு போடனும்.
அப்ப எதுக்கு தேர்தல் ஆணையர், தேர்தல், ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணிக்கை ? இவர் இவ்வளவு நாள் அரசியலில் கற்ற பாடம் இதுதானா? இன்னும் இவர் தன் தோவியை ஏற்றுக்கொள்ள மனமில்லை.
அவசரமாக எடுத்துக்கொள்ள அப்படி என்ன முக்கிய வழக்கு.
ஸ்டாலினின்
ஆழ் மனதுக்குள் கருணாநிதியின் ஆவி புகுந்து நீதான் இந்த தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் என்று மூளைச் சலவை செய்து இவரை நம்ப வைத்திருக்கிறார். அதனால்தான் ஸ்டாலின் தன்னை இன்னும் தமிழக முதல்வராகவே நினைத்துக் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
ஸ்டாலின் பேய் பிசாசுகளை நம்புறாரா?மேலும்
-
புதன் கிழமை சிறப்பு பக்கத்திற்கு... உளவுபிரிவுக்கு ஆள் தேடும் ‘போலீஸ்’
-
பதவி வேண்டி கோவில்களுக்கு படையெடுக்கும் உடன்பிறப்புகள்
-
குடியிருப்போர் குரல்.... ரோடு வசதி இன்றி மழைநீர் தேங்கி சகதிகாடாக மாறும் அவலம் தேனி நகராட்சி சிவாஜி நகர் விரிவாக்க பகுதி மக்கள் அவதி
-
ஓணம் வந்தல்லோ!
-
தென்மேற்கு பருவமழை தீவிரம் மேல்நீராறில் 101 மி.மீ., பதிவு
-
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் நெருக்கடி மன உளைச்சலால் ஆசிரியர்கள் அவதி