மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

விருத்தாசலம்: மனைவியை திட்டி, தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

விருத்தாசலம் அடுத்த பாலக்கொல்லையை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் ராஜ்குமார், 25. இவரது மனைவி சந்தியா, 21. இருவரும் காதலித்து ஓராண்டிற்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் சந்தியாவை பார்க்க வீட்டிற்கு வந்து சென்ற அவரது தோழியுடன் ராஜ்குமாருக்கு தொடர்பு ஏற்பட்டது.

இதனை தட்டிக்கேட்ட சந்தியாவை ராஜ்குமார் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில், ராஜ்குமார் மீது விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement