உளவுபிரிவுக்கு ஆள் தேடும் 'போலீஸ்'
கடலுார் மாவட்டத்தின் கடைகோடி சப் டிவிஷனுக்குட்பட்ட, இரு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உளவுப்பிரிவு போலீசாக சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் இருந்தார். அவர் குடும்ப சூழல் காரணமாக கடந்த மாதம் இடமாற்றம் செய்யப்பட்டார். அந்த பணியிடம் காலியாக உள்ளதால் அருகாமை ஸ்டேஷனில் உளவுப்பிரிவில் இருந்த இருவர் இரு ஸ்டேஷன்களிலும் கூடுதல் பணியாக கவனித்து வருகின்றனர்.
உளவுப்பிரிவு என்பது அரசின் பாதுகாப்பு, நலன் மற்றும் பொது அமைதியை காப்பது ஆகும். மேலும், அரசுக்கு ஆபத்து வருவதற்கு முன் அவற்றை தடுப்பது, எதிரிகளின் திட்டங்களை முறியடிக்கும் முக்கிய பிரிவாகும்.
அந்த முக்கிய பிரிவாக உள்ள உளவுப்பிரிவிக்கு கடைகோடி ஸ்டேஷன்களில் பணிபுரிய யாரும் முன்வரவில்லை. இதனால் எந்த போலீசாரை நியமிக்கலாம் என ஆள் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடுதல் பொறுப்பில் உள்ளவர்கள், இந்த இரு ஸ்டேஷன்களில் இருந்தும் குறித்த நேரத்திற்கு தகவல் சேகரிக்க முடியாததால் உயர் அதிகாரிகளுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் புலம்பி வருகின்றனர்.