பக்த ஆஞ்சநேயருக்கு  சிறப்பு அலங்காரம் 

கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வலம்புரி அற்புத விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

கடலுார், திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகரில் வலம்புரி அற்புத விநாயகர் கோவில் உள்ளது.

இங்குள்ள மூலவர் பக்த ஆஞ்சநேயருக்கு ஆவணி மாத மூல நட்சத்திரத்தையொட்டி சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, உற்சவர் பக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement