துக்காராம் முண்டே ஐயா, தயவு செஞ்சு இதையும் ரெய்டு பண்ணுங்க; குபீர் சிரிப்பை ஏற்படுத்திய பாலிவுட் இயக்குனர்!
-நமது நிருபர்-
''துக்காராம் முண்டே சார், நீங்கள் உணவகங்களில் மட்டும் ரெய்டு செய்கிறீர்கள். ஒவ்வொரு வீட்டிலும் சமையல் அறைகளில், பிரிட்ஜ்களில் ஏராளமான கெட்டுப்போன உணவுப்பொருட்கள் இருக்கின்றன. தயவு செய்து அதையும் கொஞ்சம் ரெய்டு செய்யுங்கள்,'' என்று பிரபல பாலிவுட் இயக்குனர் குணால் கோஹ்லி வெளியிட்ட பதிவு, குபீர் சிரிப்பை வரவழைப்பதாக உள்ளது. இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மஹாராஷ்டிரா உணவுப் பாதுகாப்பு ஆணையராக பணியாற்றி வருபவர் துக்காராம் முண்டே. அவர் பதவியேற்ற 2 மாதங்களில் 1500க்கும் மேற்பட்ட உணவகங்கள், உணவு உற்பத்தி நிறுவனங்களில் ரெய்டு நடத்தியுள்ளார். விதிமீறிய உணவகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. ஏராளமான கெட்டுப்போன உணவுகள், காலாவதியான உணவுப் பொருட்கள், கலப்பட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்படுகின்றன.
இதன் பயனாக, உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் அமலாகத் தொடங்கியுள்ளன. செயற்கை நிறமூட்டிகளை வியாபாரிகளே தவிர்க்க தொடங்கியுள்ளனர். பொதுமக்களுக்கும், இதன் பயன்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. உணவுப் பாதுகாப்புத்துறை செயல்படுவதே இப்போது தான் மக்களுக்குத் தெரிய தொடங்கியுள்ளது.
தினமும் தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் துக்காராம் முண்டே நடத்திய அதிரடி ரெய்டுகளை பாராட்டி செய்திகள் வெளியாகி வருகின்றன. நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்று அறிமுகமான அவரது அதிரடியான நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருக்கிறது.
இந்த சூழலில் பிரபல பாலிவுட் இயக்குனர் குணால் கோஹ்லி, துக்காராம் முண்டேவுக்கு கோரிக்கை விடுத்து இணையத்தில் வெளியிட்ட பதிவு பேசும் பொருளானது. அந்த பதிவில், குணால் கோஹ்லி கூறியிருப்பதாவது:
துக்காராம் முண்டே சார், நீங்கள் உணவகங்களில் மட்டும் ரெய்டு செய்கிறீர்கள். ஒவ்வொரு வீட்டிலும் சமையல் அறைகளிலும் அதிரடி சோதனை நடத்த கோரிக்கை விடுக்கிறேன்.
அங்கே பல ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியான பொருட்கள் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்; ஒவ்வொரு வீட்டிலும் சமையல் அறைகளில், ரெப்ரிஜிரேட்டர்களில் ஏராளமான கெட்டுப்போன உணவுப்பொருட்கள் இருக்கின்றன. தயவு செய்து அதையும் கொஞ்சம் ரெய்டு செய்யுங்கள்.
சரி, நாமே துக்காராம் முண்டே பாணியில் நம் சமையலறையையும், ரெப்ரிஜிரேட்டர்களையும் ஒருமுறை சுத்தம் செய்து பார்ப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த பதிவு, குபீர் சிரிப்பை வரவழைப்பதாக உள்ளது. இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பலரும் இது பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர். 'குணால் கோஹ்லி கூறியுள்ளது உண்மை தான். எல்லா வீட்டிலும் ரெப்ரிஜிரேட்டர்களில் பழைய உணவுப் பொருட்கள் தான் இருக்கின்றன' என்று ஆமோதிக்கும் வகையில் ஏராளமான பதிவுகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
எனதுமனைவி 2 டோர் பிரிட்ஜ் வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். பல காலமாக நானும் தேடிக்கொண்டுள்ளேன். நினைப்பதுபோல கிடைக்கவில்லை. மீந்துபோன உணவுப்பொருட்கள் அனைத்தும் முன்பிருந்து பின்னுக்குத்தள்ளப்பட்டு பிரிட்ஜின் பின்பகுதிக்கு சென்றுவிடுகிறது. முன்வரிசை எப்பொழுதுமே நிரம்பிவிடுவதால் கடந்தகால உணவுகள் அனைத்தும் கண்ணுக்கெட்டாததூரத்தில் பின்வரிசையில் சென்றுவிடுகின்றன. அவைகளை பார்த்து எடுத்து உபயோகப்படுத்த வேண்டுமென்றால் பிரிட்ஜுக்கு பின்பக்கமும் ஒரு கதவு இருந்தால்தான் சாத்தியம். அதுபோன்றதொரு வசதியுள்ள பிரிட்ஜ் எவ்வளவு தேடியும் இன்றுவரை கிடைக்கவில்லை.
அவர் வீட்டில் ஒரு குளிர் சாதன பெட்டியில் கூட இருக்கும். நடவடிக்கை வீட்டில் எடுக்க முடியாது.
அரசு சம்பளம் கொடுப்பது வீட்டிற்கு வந்து சோதனை செய்வதற்கு அல்ல. விற்பனையாளர்கள் தரமான உணவு வழங்குவதற்காகத்தான் அரிதிலும் அரிதான நேர்மையான அதிகாரிகளின் உண்மையான உழைப்பை கிண்டல் செய்வது நியாயமல்ல.
yes he is dead right.
வீட்டில் இருக்கும் குளிர்சாதன பெட்டி ஒரு குப்பைத்தொட்டி சரி, மனிதனின் வயிறு.
இந்த குணால் கோஹ்லியின் நகைச்சுவை கருத்து பதிவு
பாலிவுட்காரர்களை நம்ப முடியாது.
நாமே நமது வீட்டு ஃபிரிட்ஜ் ல் சோதனை நடத்தினால்.... நமக்கு பாதுகாப்பு தருவது யார்.....????
தேவையில்லாத வேலை......
குணால் கோஹ்லி போன்று மிகவும் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அவர் கோரிக்கை மிகவும் நியாயமானது. அதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை. மாறாக வேதனை படவேண்டும். அழுகும் நிலையில் இருக்கும் பொருட்கள் கூட வீட்டில் உள்ள பிரிட்ஜ்களில் சேமித்து, அதை குணால் கோஹ்லி மற்றும் என்னைப்போன்ற ஏமாளி கணவர்களுக்கு கொடுப்பார்கள் இந்த காலத்து ராட்சசி மனைவிமார்கள். அல்லது கெட்டுவிட்டது என்று தூரவீசி எறிவார்கள். பொருட்கள் நல்லநிலையில் இருக்கும்போதே அவற்றை தின்ன கொடுக்கமாட்டார்கள் வீட்டு ராட்சஸிகள்.
அந்த பாலிவூட்டு இயக்குனருக்கு வேறவேலை இல்லை போலிருக்கு. அனுபவம்தான் பேசுது.. முதலில் அவனுடைய வீட்டில் தான் ரைடு செய்யணும். முதிர்ச்சி இல்லாத அதே சமயத்தில் காமெடி செய்வதாக நினைத்துக்கொண்டு பேசுகிறார்
Peoples self awareness works,there is no necessity to raid,as such people avoid themselves eating unhygienic food.as also the refuse management at home..People should follow Gandhian thought for self help to safeguard their own interests and safety.