மக்கள் தொடர்பு முகாம்

மதுரை: மதுரை வடக்கு தாலுகா சார்பில் சத்திரப்பட்டியில் நேற்று மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடந்தது.

இதில் டி.ஆர்.ஓ., அன்பழகன், ஆர்.டி.ஓ., கருணாகரன், சமூகநலத் திட்ட பாதுகாப்பு அலுவலர் பொன்ராஜ், தாசில்தார் கமலேஷ், துணைத் தாசில்தார் ராஜேஷ், ராஜா, ஆர்.ஐ., அனிதா மற்றும் வருவாய் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். முகாமில் இலவச பட்டா, பட்டா மாறுதல் உட்பட 235 மனுக்களும், மகளிர் உரிமைத் தொகைக்காக 150 மனுக்களும் வந்தன. அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement