புகையிலை கடத்திய வடமாநில வாலிபர்கள் கைது
விழுப்புரம்: வெளி மாநிலத்தில் இருந்து காரில் புகையிலை பொருட்கள் கடத்திய வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு நேற்று அதிகாலை 3:30 மணிக்கு, தனியார் பள்ளி சர்வீஸ் சாலையருகே வாகனத்தில் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது அவ்வழியே வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் 240 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ஹான்ஸ் 14 மூட்டைகளும், கூலிப் 5 மூட்டைகளும் பறிமுதல் செய்தனர்.
காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலம், நயாஜான்புறா பகுதியை சேர்ந்த மோட்சிங் மகன் மனோகர் சிங்,25; தும்படியா கிராமத்தை சேர்ந்த குத்தாராம் மகன் ஜிதேந்தர் சிங்,22; ஆகியோரை, போலீசார் விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
விசாரணையில், இருவரும் புகையிலை பொருட்களை புதுச்சேரி, விழுப்புரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வினியோகம் செய்வதற்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து, புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும்
-
கட்டி முடித்தும் பூட்டியே கிடக்கும் அறிவுசார் மையம் திறக்கப்படுமா?: செஞ்சியில் மாணவர்கள், கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு
-
மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
-
விஜயகாந்த் பிறந்த நாள் நல உதவி வழங்கல்
-
துாய இருதய கல்லுாரியில் ஓணம் பண்டிகை
-
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆய்வு
-
வேப்பூரில் ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் மக்கள் கடும் வாக்குவாதம்: அடுக்கடுக்கான புகார்களால் அதிகாரிகள் அச்சம்