துாய இருதய கல்லுாரியில் ஓணம் பண்டிகை

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பேரணி துாய இருதய கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கல்லுாரி செயலாளர் பிரிட்டோ தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் டேவிட் சவுந்தர் வாழ்த்துரை வழங்கினார். வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் காந்திமதி சிறப்புரையாற்றினார்.

இதில், கல்லுாரி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை மரபு பண்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளைர் தனலட்சுமி, இணை ஒருங்கிணைப்பாளர்கள் சுகுமார், அந்தோணியம்மாள் செய்திருந்தனர்.

Advertisement