மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்: விழுப்புரத்தில், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார்.
ஒன்றிய தலைவர்கள் கஜலட்சுமி, அண்ணாதுரை, செல்வி, அருணாச்சலம், தட்சிணாமூர்த்தி, கவுரி, பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
இதில், கடந்த நான்காண்டுகளாக உயர்த்தாமல் உள்ள மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித் தொகையை உயர்த்த வேண்டும்; விண்ணப்பித்து காத்துள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்; என வலியுறுத்தப்பட்டது.
இதேபோல, திண்டிவனம் தாலுகா அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று காலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும், செஞ்சியில், தாசில்தார் அலுவலகம் எதிரே மாற்றுத்திறனாளிகள் ஒன்றிய கமிட்டிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடந்தது.
மேலும்
-
பாகிஸ்தானில் ஏசி கம்ப்ரசர் வெடித்ததில் 15 பச்சிளம் குழந்தைகள் பலி
-
தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப்பணியில் முன்னுரிமை ; கவர்னர் ஒப்புதல்
-
சென்னை விமான நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்; வடமாநில பெண்கள் இருவர் கைது
-
லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலியான சோகம்
-
கேரளாவில் களைகட்டியது ஓணம் பண்டிகை; அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்
-
மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்; பிரதமர் மோடி, முதல்வர் விஜய் மிலாது நபி வாழ்த்து