விஜயகாந்த் பிறந்த நாள் நல உதவி வழங்கல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு, தெற்கு நகர செயலாளர் இளையராஜா தலைமை தாங்கினார்.
வடக்கு நகர செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ஆதவன் முத்து, மாவட்ட நிர்வாகிகள் ஆதிநாராயணன், கணேசன், அவைத் தலைவர் சுபாஷ், பொருளாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நல உதவி மற்றும் அன்னதானம் வழங்கினார்.
அப்போது, நகர துணை செயலாளர்கள் கண்ணபிரான், சீத்தாபதி, மாவட்ட பிரதிநிதிகள் கார்த்தி, சாதீக் பாட்ஷா, வடக்கு இளைஞரணி துணை செயலாளர் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தானில் ஏசி கம்ப்ரசர் வெடித்ததில் 15 பச்சிளம் குழந்தைகள் பலி
-
தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப்பணியில் முன்னுரிமை ; கவர்னர் ஒப்புதல்
-
சென்னை விமான நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்; வடமாநில பெண்கள் இருவர் கைது
-
லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து; பயணிகள் 6 பேர் பலியான சோகம்
-
கேரளாவில் களைகட்டியது ஓணம் பண்டிகை; அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்
-
மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்; பிரதமர் மோடி, முதல்வர் விஜய் மிலாது நபி வாழ்த்து
Advertisement
Advertisement