இருட்டில் தெரியாத வேகத்தடையால் ஆட்டோ கவிழ்ந்து பெண் ஓட்டுநர் பலி

வண்டலுார்: தெருவிளக்கு இல்லாததால், இருட்டில் தெரியாத வேகத்தடையால் ஆட்டோ கவிழ்ந்ததில் பெண் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

செங்கல்பட்டு, ஊரப்பாக்கம், அண்ணா தெருவைச் சேர்ந்த திவ்யா, 40; ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று இரவு திருவேங்கட பெருமாள் கோவிலுக்கு சவாரி சென்று வீடு திரும்பியுள்ளார்.

வேங்கடமங்கலத்தில் இருந்து கண்டிகை செல்லும் சாலையில் உள்ள சர்ச் எதிரே இருந்த வேகத்தடையில், ‘வெள்ளை கோடு’ மற்றும் தெருவிளக்கு வசதி இல்லாததால், அதில் ஏறிய ஆட்டோ, திவ்யா மோதி கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த திவ்யா சம்பவ இடத்திலேயே பலியானார்.

பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement