அமெரிக்க ராணுவ தளங்கள் வரை சென்று தாக்கும் தனித்துவ ஆயுதங்களை உருவாக்கியுள்ளது சீனா
பீஜிங்: ஆயிரக்கணக்கான கி.மீ., தொலைவில் வான்வெளியில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்கள் போன்ற முக்கிய இலக்குகளை சுட்டு வீழ்த்தக்கூடிய தனித்துவமான ஆயுதங்களை சீனா உருவாக்கியுள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் உடனான போரால், முக்கியமான வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் நீண்ட துார தாக்குதல் ஆயுதங்கள் வினியோகத்தில் அமெரிக்கா சிரமங்களை சந்தித்து வருகிறது.
நவீன ஆயுதம்
வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்கள், வான்வழி முன்கூட்டியே எச்சரிக்கும் மற்றும் கட்டுப்பாட்டு விமானங்கள் மற்றும் அமெரிக்காவின் இ - 4 பி 'நைட் வாட்ச்' என்ற வான்வழி கட்டளை மைய விமானங்கள் போன்றவை மிகவும் பாதுகாப்பான தளவாடங்களாக அமெரிக்காவுக்கு இருந்து வருகிறது.
இவற்றின் மூலம், தன் எல்லையில் இருந்தே, ஆயிரக்கணக்கான தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் அமெரிக்காவிடம் உள்ளது.
இந்நிலையில், இதற்கு சவால் விடும் வகையில், வான்வெளியிலேயே அவற்றை அழித்து தாக்கக் கூடிய, ' ஹைப்பர்சோனிக் கிளைடு வெகிகிள்' எனப்படும், நவீன ரக ஆயுதத்தை சீனா உருவாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒரே நாடு
சீனாவிடம் ஏற்கனவே, ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகள் உள்ளன. இத்துடன் தற்போது, வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் கிளைடு அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த ஆயுதம் உள்ள ஒரே நாடு சீனாதான்.
சீனாவின் டி.எப்., - 17 என்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணையில் இருந்து ஏவப்படும் ஹைப்பர்சோனிக் கிளைடு ஆயுதம் 2,414 கி.மீ., துாரம் பயணிக்கக்கூடியது. இது சீனாவில் இருந்து மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள அமெரிக்காவின் முக்கிய ராணுவ தளமான குவாம் தீவை எட்டும் துாரத்தைவிட சற்று குறைவாகும்.
அதேவேளையில், மிகவும் மேம்பட்ட டி.எப்., - 27 ரக ஹைப்பர்சோனிக் ஏவுகணையில் இருந்து ஏவப்படும் இந்த ஆயுதம் 8,000 கி.மீ., வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இது அமெரிக்காவின் மற்றொரு ராணுவ தளமான ஹவாய் தீவை தாக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.
@block_B@
ஹைப்பர் சோனிக் கிளைடு ஆயுதங்கள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் அனுப்பப்படும். கீழ்வளிமண்டலத்தை எட்டியதும், இது ஏவுகணையில் இருந்து பிரிந்து செல்லும். அதன்பின், தன் இலக்கை நோக்கி பயணிக்கும். அதன்பின், ஒலியை விட பல மடங்கு வேகத்தில் வானில் உள்ள இலக்கை நோக்கி, எதிரியின் ரேடாரில் சிக்காத வகையில் தன் திசையை மாற்றியபடியே சீறிப்பாயும். சில சமயங்களில் திசை மாறி செல்லும்.block_B
பல ஆயுதங்கள் பற்றி அமெரிக்கா வெளியே சொன்னாலும் சொல்லாத, மேம்பட்ட வேற்று நாகரீக உயிரிகளிடத்திடம் இருந்து ஏராளமான தொழில் நுட்பங்களை பெற்று அவற்றை கூட்டாக மேம்படுத்தி இருக்கிறது. சீனா ராணுவ ரீதியாக அமெரிக்காவை எதிர்த்தால் அவற்றை அவர்கள் பயன்படுத்த தயங்க மாட்டார்கள். கடலுக்கடியில் ஏராளமான ஆயுதக்கிடங்குகளில் அணுவாயுதங்களை விட கொடிய ஆயுதங்களை பதுக்கி வைத்து இருக்கிறார்கள்.
அமெரிக்க ராணுவத் தளங்கள் மட்டுமா, பக்கத்து ஊரான இந்திய நாட்டையும் மறந்து விடக் கூடாது. சீன ஆட்சியாளர்களின் நம்பகத்தன்மை உறவு என்றுமே கேள்விக் குறிதான்
ரூம் போட்டு விட்டலாச்சார்யா பாணியில் …மேலும்
-
டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர்கள் 2 பேர் காயம்
-
கட்டி முடித்தும் பூட்டியே கிடக்கும் அறிவுசார் மையம் திறக்கப்படுமா?: செஞ்சியில் மாணவர்கள், கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு
-
மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
-
விஜயகாந்த் பிறந்த நாள் நல உதவி வழங்கல்
-
துாய இருதய கல்லுாரியில் ஓணம் பண்டிகை
-
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆய்வு