மஹிந்திரா 'ஸ்கார்பியோ லைப்ஸ்டைலர்' பிக்கப்

'மஹிந்திரா' நிறுவனம், 'ஸ்கார்பியோ லைப்ஸ்டைலர்' என்ற 'டபுள் கேப் லைப்ஸ்டைல் பிக்கப் டிரக்'கை உலகளவில் காட்சிப்படுத்தி உள்ளது. இது, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என கூறப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று மாடல்களில் வரும் இந்த பிக்கப், லத்தீன் அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

அடுத்த தலைமுறை லேடர் பிரேம் கட்டுமான தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிக்கப், 1,000 கிலோ எடையை சுமக்கும், 3,500 எடையை இழுக்கும் திறன் உடையது. இதில், 2.2 லிட்டர் 'எம் - ஹாக்' டர்போ டீசல் மற்றும் 2.0 லிட்டர் 'எம் - ஸ்டாலியன்' பெட்ரோல் இன்ஜின்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

ரியர் வீல் மற்றும் 4 - வீல் டிரைவ் அமைப்புகளில் வரும் இந்த பிக்கப், 6 - ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ்களில் வரும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

அதிக எடையை சுமக்க பின்புற, 'ஹெவி டியூட்டி லீப் ஸ்பிரிங்' சஸ்பென்ஷன், ஸ்கார்பியோ அடையாளம் உள்ள பெரிய முன்புற கிரில், 230 எம்.எம்.,க் கு அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸ், அடாஸ் லெவல் - 2, 360 டிகிரி கேமரா, 12.8 அங்குல நடு டிஸ்ப்ளே, ஆட்டோ ஏ.சி., வென்ட்டிலேட்ட ர், பவர்டு சீட்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.

@block_B@ எதிர்பார்ப்பு விலை ரூ. 18 - 19 லட்சம்block_B

Advertisement