கைலாசநாதர் கோவிலில் ஆவணி சதுர்த்தசி பூஜை

விழுப்புரம்: ஆவணி சதுர்த்தசியை முன்னிட்டு, சிவகாமி உடனுறை நடராஜர் உற்சவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழுப்புரம் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் ஆவணி சதுர்த்தசி சிறப்பு பூஜை நடந்தது.

அதனை முன்னிட்டு நேற்று மாலை 6:00 மணிக்கு சிவகாமி உடனுறை நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், உற்சவர் சிவகாமி சமேத நடராஜர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement