பிராமணர்கள் பூணுால் அணியும் நிகழ்ச்சி

விழுப்புரம்: ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, விழுப்புரம் சங்கரமடத்தில் பூணுால் அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரிக் வேத உபாகர்மா வழக்கமாக சிராவண மாதத்தில் ரிக் வேத விதிப்படி அவிட்டம் அல்லது ஹஸ்த நட்சத்திரம் மற்றும் திரிதியை திதியை அடிப்படையாக கொண்டு பவுர்ணமிக்கு முந்தையநாட்களில் கொண்டாடப்படுகிறது.

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, விழுப்புரம் ஸ்ரீ மகா பெரியவர் அவதார ஸ்தலமான சங்கரமடத்தில், ரிக் வேதத்தை சேர்ந்த பிராமணர்கள், நேற்று புனித நீராடி புதிய பூணுால் அணிந்து பழைய பூணுாலை துறந்தனர்.

Advertisement