செஞ்சியில் நான்கு வழிச் சாலை விரிவாக்க பணி ஆய்வு

செஞ்சி: செஞ்சி - விழுப்புரம் இடையே நடந்து வரும் நான்கு வழி சாலை விரிவாக்க பணியை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.

ஆற்காடு - விழுப்புரம் தேசிய நெடுஞ் சாலையில் செஞ்சி உட்கோட்டத்திற்கு உட்பட்ட செஞ்சி - விழுப்புரம் சாலையில் மட்டப்பாறை கிராமம் வரை ரூ.85 கோடி மதிப்பில் 13.50 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது .

இந்த பணியை நேற்று சென்னை மண்டல தலைமை பொறியாளர் பழனிவேல் ஆய்வு செய்தார்.

அப்போது பணியை தரமாகவும், வடகிழக்கு பருவமழைக்கு முன்பும் முடிக்க அறிவுறித்தினார் .

ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியன், கோட்ட பொறியாளர்கள் நாராயணன், ஸ்ரீகாந்த் மற்றும் உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisement