பெரிய பள்ளி வாசலில் மிலாது நபி விருந்து

செஞ்சி: பெரிய பள்ளிவாசலில் மிலாது நபியை முன்னிட்டு பொது விருந்து வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது

இதையொட்டி சிறப்பு தொழுகையும், பொது விருந்தும் நடந்தது. தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் நிகழ்ச்சியை, துவக்கி வைத்தார். செஞ்சி வட்ட ஜமாத் தலைவர் சையத் மஜித் பாபு முன்னிலை வகித்தார்.

செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய அவைத்தலைவர் வாசு, பொருளாளர் இக்பால், மாவட்ட பிரதிநிதி சையத் சர்தார், கவுன்சிலர் ஜான் பாஷா மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement