டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி; இருவர் காயம்
கோவைபுதூர்: கோவைபுதூர், அறிவொளி நகரிலுள்ள தனியார் கல்லூரி இரண்டாமாண்டு மாணவர் கரூரை சேர்ந்தவர் கவின்ராஜ், 19. இவர் கல்லூரி முடிந்து, தனது வகுப்பு மாணவரான கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியை சேர்ந்த கோகுல், 19 மற்றும் கரூர், வெங்கமேடு, வாங்கபாளையத்தை சேர்ந்த முதலாமாண்டு மாணவர் தாரிஷ், 17 ஆகியோரை அழைத்துக்கொண்டு ஸ்கூட்டரில், மேற்கு புறவழி சாலையை கடந்து, கோவைபுதூர் சாலையில் சென்றார்.
ஒரு வளைவில் எதிரே கட்டட கழிவு ஏற்றி வந்த டிப்பர் லாரியின் பின் சக்கரத்தில் ஸ்கூட்டர் மோதியது. பின்னால் உட்கார்ந்திருந்த தாரிஷ், லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கவின்ராஜ், கோகுல் ஆகியோரை அங்கிருந்தோர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மதுக்கரை போலீசார் லாரி டிரைவரான, ஈச்சனாரி, பாட சாலை வீதியை சேர்ந்த பாராசரணிடம் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
வாயில் கருப்பு துணி கட்டி பணியாளர்கள் போராட்டம்
-
கராத்தே: 955 பேர் உற்சாகம்
-
எலப்பாக்கம் - உத்திரமேரூர் - செங்கை அரசு பேருந்தை முறையாக இயக்க மனு
-
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆதார் நகலை சமர்ப்பிக்கணும்
-
மாகறலில் குழாய் உடைந்து தினமும் வீணாகும் குடிநீர்
-
வாலிபர் வெட்டி படுகொலை முன்விரோதத்தால் வெறிச்செயல்