நேபாள வெள்ளத்தில் சிக்கிய தர்மபுரி, கிருஷ்ணகிரியை சேர்ந்த 6 பேர்

ஓசூர்: நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்-பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நேபாளத்திற்கு, 36 பெண்கள் உட்பட மொத்தம், 57 பேர் ஆன்மிக பயணம் மேற்கொண்டனர். வெள்ளத்தில் சிக்கி, 400க்கும் மேற்பட்டோர் மாயமானதாக கூறப்படுகிறது.


கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து, 4 பேர் நேபாளத்திற்கு ஆன்-மிக பயணம் மேற்கொண்டனர். சூளகிரி அருகே அலேகுந்தா-ணியை சேர்ந்த திம்மராயசாமி, 46, அவர் மனைவி மம்தா, 40, மற்றும் ஓசூர் அண்ணா நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரகுநாதன், 57, மற்றும் ஓசூர் ஏ.எஸ்.டி.சி., ஹட்கோவை புஷ்ப-ராணி, 60, ஆகியோர், நேபாளத்தில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.திம்மராயசாமி, மம்தா ஆகியோர் சூளகிரி மில்லத் நகரில், பாஸ்ட்புட் கடை நடத்தி வருகின்றனர். ரகுநாதன் நேபாளத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. அனைவரது நிலை குறித்தும், மாவட்ட நிர்வாகம் விசாரித்து வருகிறது.
* தர்மபுரி மாவட்டம், மணியம்பாடியை சேர்ந்தவர் அரசு போக்-குவரத்துக்கழக பஸ் டிரைவர் இளையராஜா, 48. இவர் ஓசூரில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் மனைவி பிரேமவாணி, 45. இவரது உறவினர் தர்மபுரி காந்தி நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்.ஐ., விஜயகுமாரின் மனைவி புஷ்பா, 55. இருவரும் கும்ப-கோணத்திலுள்ள தனியார் சுற்றுலா ஏஜென்சி மூலம் நேபாளத்-திற்கு கடந்த, 23ம் தேதி ஆன்மிக சுற்றுலா அழைத்து சென்றனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் தங்களது குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை, நேபாளம் வடக்கு ராசுவா பகு-தியில் கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இருவரும் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அவர்களை நேற்று காலை முதல், மொபைல் போனில் தொடர்பு கொள்ள முடியாததால், அவர்-களின் குடும்பத்தினர் கவலை அடைந்தனர். இது குறித்து, தமி-ழக அரசின் கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தகவல் தெரிவித்-தனர். தர்மபுரி தாசில்தார் சுகுமார், காந்திநகரிலுள்ள புஷ்பா வீட்-டிற்கு சென்று விசாரித்தார். புஷ்பா, பிரேமவாணி இருவரையும், மத்திய, மாநில அரசுகள் பத்திரமாக மீட்டுத்தர, இருவரின் குடும்-பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement