உலகளவில் விசா நேர்காணல்களை நிறுத்தி வைத்துள்ளது அமெரிக்கா
வாஷிங்டன்: உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்களில் விசா நேர்காணல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், குடியேற்ற கட்டுப்பாடு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். மாணவர்கள், வேலை பார்ப்போர், வர்த்தகம், சுற்றுலா என பல விசாக்களில் கடும் விதிமுறைகளை கொண்டு வந்துள்ளார்.
அந்த வகையில் சுற்றுலா அல்லது வணிகத்திற்காக வந்து, அகதி அந்தஸ்து கோரியுள்ள, 2 லட்சம் வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள அமெரிக்க துாதரகங்கள் மற்றும் துாதரக அலுவலகங்களில் விசா நேர்காணல்கள் நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க அரசு வழங்கும் நலத்திட்டங்களைச் சார்ந்து வாழும் வாய்ப்புள்ள விண்ணப்பதாரர்களை கண்டறிந்து நிராகரிப்பது மற்றும் விசா விண்ணப்பங்களை மிகவும் தீவிரமாகவும், ஒரே மாதிரியாகவும் ஆய்வு செய்வது குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் எப்போது மீண்டும் தொடங்கும் என்ற விபரத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிடவில்லை.
மற்ற நாடுகளில் அமெரிக்கர்களுக்கு மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். அமெரிக்கர்களுக்கு 100 மடங்கு விசா கட்டணம் விதிக்க வேண்டும், அமெரிக்கர்கள் எந்த தொழிலும் செய்ய விடக்கூடாது, அமெரிக்க பொருட்களை வாங்க கூடாது. வரி பைத்தியம் டிரம்புபை வழிக்கு கொண்டு வர உதவும்
பலியானார் தலைவாசல் மிதியாதே
அமெரிக்க அரசாங்கத்தை குடியேற்ற விதிமுறைக்கு மாறாக ஏமாற்றும் கும்பல்களையும் நபர்களையும் வெளியேற்றுவது நல்லதுதான்.மேலும்
-
கிர்கிஸ்தானில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கிறார் பிரதமர் மோடி
-
இன்று தேர்தல் நடந்தாலும் தேஜ கூட்டணி 326 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பு; கருத்துக்கணிப்பில் தகவல்
-
நேபாளத்தில் பணியாற்றிய இந்தியர்கள் 63 பேர் பத்திரமாக மீட்பு; பெயர் பட்டியல் வெளியீடு
-
இக்கட்டான சூழ்நிலையில் உதவி; இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருகிறார் நேபாள பிரதமர்
-
நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்; அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
ஏரியின் பெயரை மாற்றினார் டிரம்ப்; கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு