ஒரு 'வீடியோ' போடுங்க ரிஜிஜு: கிண்டலடித்த காங்கிரஸ்
புதுடில்லி: டில்லியில் பெய்த கனமழையால் பார்லி., வளாகத்தில் மழைநீர் குளம் போல தேங்கிய நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த பார்லி., விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவை காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றில் நீச்சலடித்தது போல, இங்கும் துணிச்சலாக நீச்சலடித்து சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை அவர் பகிர வேண்டும் என தெரிவித்துள்ளது.
'காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், தண்ணீரில் சிறப்பாக நீச்சலடிப்பார். அந்த அளவுக்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்' என, காங்கிரசார் தெரிவித்து இருந்தனர்.
எச்சரிக்கை
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தன் சொந்த ஊரான அருணாச்சல பிரதேசத்தில் ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றில் குதித்து நீந்திய பார்லி., விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அதை சமூக ஊடகத்தில், 'ரீல்ஸ்' எனப்படும் வீடியோவாக வெளியிட்டார்.
மேலும், 'ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றில் நீந்தும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என கூறி, சில உத்திகளையும் அந்த வீடியோவில் பகிர்ந்து இருந்தார்.
'வேகமாக ஓடும் ஆறுகளில் நீந்துவதற்கு ராகுலுக்கு வேண்டுமென்றால் பயிற்சிகள் தேவை; ஆனால் எனக்கு அப்படியல்ல; நான் இந்த மண்ணின் மைந்தன். ஆறுகளில் நீந்துவது என் வாழ்க்கையில் இயல்பான விஷயம்' என, கூறியிருந்தார்.
பதிலடி
ராகுலை விமர்சிக்கும் வகையில் கிரண் ரிஜிஜு வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், அவருக்கு பதிலடி தர கேரள காங்., தரப்பில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
டில்லியில் புதிதாக கட்டப்பட்ட பார்லி., வளாகத்தில் கனமழையால் குளம் போல தண்ணீர் தேங்கி இருந்ததை அந்த வீடியோவில் சுட்டிக்காட்டிய காங்கிரசார், 'நீச்சலில் கில்லாடியான கிரண் ரிஜிஜு இங்கேயும் நீந்தி, ஒரு வீடியோவை வெளியிட வேண்டும்' என கிண்டலடித்துள்ளது.
கான்க்ரீஸின் கேவலமான அரசியல் …
பல மாதங்களாக பாராளுமன்றத்தை புறக்கணித்தவர்களுக்கு,பாராளுமன்றம் இருக்கும் இடம் கூட தெரிகிறதா?நன்றி
பல மாதங்களாக பாராளுமன்றத்தை புறக்கணித்தவர்களுக்கு பாராளுமன்றம் இருக்கும் இடம் கூட தெரிகிறதா?நன்றி
கிண்டலை ரசிக்கலாம்.
பிரியனை பலர் கிண்டல் செய்வதும்.வாடிக்கை....மேலும்
-
காரியாபட்டி அரசு பெண்கள் பள்ளியில் ரோட்டோரத்தில் சைக்கிள் ஸ்டாண்ட்
-
இரவில் பஸ் வசதியின்றி கூடலுார் மக்கள் அவதி
-
திருப்பாலைக்குடியில் கடற்கரை ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்
-
சிவகங்கை, ராமநாதபுரத்தில் பால் உற்பத்தி பாதிப்பு பூட்டிக் கிடக்கும் பால்பண்ணை
-
கீழக்கரை மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
-
விழிப்புணர்வு ஊர்வலம்