தேர்தலில் போட்டியிட ரூ.2 கோடி பேரம்? த.வெ.க., நிர்வாகியின் ஆடியோ வைரல்
பல்லடம்: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட, 2 கோடி ரூபாய் செலவாகும் என திருப்பூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலாளர் பேசியதாக கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலாளர் சங்கர் மற்றும் பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் பேசியதாக கூறப்படும் அந்த ஆடியோவில், ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது தொடர்பாக இருவரும் பேசுகின்றனர்.
அதில், ''நீ இப்போதே பணம் தர மாட்டேன் என்கிறாய். தேர்தலில் போட்டியிட ஒரு கோடி, இரண்டு கோடி ரூபாய் பணம் கேட்டால் எப்படி கொடுப்பாய்?'' என சங்கர் கூறுகிறார். மேலும், பல்லடம் எம்.எல்.ஏ., ராம்குமாரை பாலசுப்பிரமணியம் சந்திக்கச் சென்றது தொடர்பாகவும் ஆடியோவில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம் நேற்று மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்தார்.
அவர் அளித்த மனு:
பல்லடம் ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தேன். இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் சங்கரிடம் பேசியபோது, ஊராட்சித் தலைவர் பொறுப்புக்கு 2 கோடி ரூபாய் வேண்டும் என்றும், ஏற்கனவே கேட்ட ஒரு லட்சம் ரூபாயையே தரவில்லை என்றும் கூறினார்.
இந்த உரையாடலை யாரோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இதையடுத்து, மாவட்ட அலுவலகத்துக்கு வரவழைத்து, ஆடியோவை வெளியிட்டது பல்லடம் நகர செயலாளர் ராமமூர்த்தி எனக் கூறி மிரட்டி, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்க வைத்தனர். இதனால், எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் சங்கர் கூறுகையில், ''மற்ற கட்சியினர் தேர்தலுக்கு ஒரு கோடி, இரண்டு கோடி ரூபாய் வரை செலவழிக்கின்றனர் என்றுதான் பேசினேன். அதை நான் 2 கோடி ரூபாய் கேட்டதாக தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர்.
எம்.எல்.ஏ., ராம்குமார் எனது உடன்பிறவா சகோதரர் போன்றவர். ஆடியோவை தவறாக பயன்படுத்தி வைரலாக்கி வருகின்றனர். இதுதொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
தேர்தலில் பணத்தை கொட்டி செலவு செய்து, பதவிக்கு வந்தவுடன் பெட்டி பெட்டியாக அள்ளிக் கொள்வது என்பது திராவிட கட்சிகள் வளர்த்த அரை நூற்றாண்டு கால கலாச்சாரம். அரசியல்வாதிகள் அள்ளி குவிப்பதை பார்த்த அதிகாரிகளும் அள்ளி குவித்தனர். மொத்தத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் லஞ்ச லாவண்யத்தால், தமிழகம் சூறையாடப்பட்டது. எனவே திராவிட கட்சிகள் உருவாக்கிய கலாச்சாரம், அவ்வளவு எளிதில் மறைந்து விடாது.
ஆண்ட இரு திராவிட கழகங்களின் மாவட்டம், ஒன்றியம் கோடிகளில் பேச முப்பது வருடங்கள் ஆனது.வெற்றிக் கழகத்தினர் மூன்றே மாதங்களில் கோடிகளில் டீல் பேச ஆரம்பித்து விட்டனர். ஆஹா இதுவல்லவோ மக்கள் விரும்பிய மாற்றம்?
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆக போகும் தமிழக தோல்வி கழகம்
இவ்வளவு குறைச்சல் அமவுண்ட் எப்படி போதும்?
இப்பதான் ஆரம்பிச்சுருக்காங்க, அடுத்து மாடலையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு உயரும்.
லஞ்சம் வாங்கமாட்டோம், வாங்கிறவனை விடமாட்டோம், நாங்கள் தூய சக்தி. நாங்க வாங்குறது அன்பளிப்பு மட்டுமே. நாங்கள் வழங்கும் சோபாகூட அன்பளிப்பே
உத்தம புத்திரர்கள் .. ஊழலை ஒழிக்க வந்து தூய சக்தி.. கொடும
தவெகவினர் இப்போது தெளிந்து விட்டார்கள். விஜய் எப்படி ஊழலை ஒழிக்க போகிறார்.
தமிழகத்தில் ஊழல் என்பது பெருந்தலைவர் காமராஜருக்கு பிறகு, 60/70 வருடங்களாக ஆழமாக ஊறிப் போய் உள்ளது. நம் அரசியல் தலைவர்களிடம் அடி மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழலில் இருந்து நிரந்தரமாக மாற்ற வேண்டுமென்றால் பல வருடங்களாகும். இதற்கு ஊழல் இல்லா ஆட்சி ஒரு முப்பது வருடங்களாவது ஆட்சி செய்ய வேண்டும். இப்போதுதான் இந்த ஊழல் என்ற கேன்சர் அறுத்து எறியப்படும்.
எல்லாம் ஒரு கீவ் அண்ட் டேக் பாலிசி யா இருக்கும்