கான்பூரில் பயிற்சி விமானம் விபத்து; பைலட்டுகள் இருவர் பலி
கான்பூர்: உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் தனியாருக்கு சொந்தமான பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் பைலட்டுகள் இருவர் உயிரிழந்தனர்.
கான்பூரில் உள்ள கங்கா பரேஜ் அருகே வயலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்த விமானம், கர்க் ஏவியேஷன் என்ற தனியார் பயிற்சி நிறுவனத்திற்குச் சொந்தமானது. கர்நாடகாவைச் சேர்ந்த அபிஷேக் புஜாரி என்ற பயிற்சி பைலட்டும், குஜராத்தைச் சேர்ந்த மிகவும் அனுபவமிக்க பயிற்றுநர் சச்சின் பாட்டியா என்பவரும் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஜூனில் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் இரண்டு சீட்டர் பயிற்சி விமானம் வயலில் விபத்துக்குள்ளானது. அதேபோல, கடந்த மே மாதம், மஹாராஷ்டிராவின் பாராமதியில் ரெட்பேர்ட் பிளைட் ட்ரெய்னிங் அகாடமிக்குச் சொந்தமான பயிற்சி விமானம் தரையிறங்கும் போது ஒரு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
"கனவுகளோடு வானில் பறக்கத் தொடங்கிய இளம் பைலட்டுகளின் உயிரிழப்பு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இருவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்."
"தரைக்கு மிக அருகில் Low Altitude ஏற்படும் சிறிய கட்டுப்பாட்டுப் பிழையோ அல்லது Go-Around தாமதமோ மிகக் கொடூரமான முடிவை ஏற்படுத்திவிடுகிறது. காக்பிட் நெறிமுறைகள் Positive Handover of Controls மற்றும் ஸ்டால் தடுப்புப் பயிற்சிகள் எந்தளவுக்கு முக்கியம் என்பதை இந்த VT-NBV விபத்து உணர்த்துகிறது. முறையான விசாரணை மூலம் உண்மை வெளிவர வேண்டும்."
"மிகவும் வேதனையான சம்பவம். உயிரிழந்த இளம் பைலட் மற்றும் பயிற்றுநரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இதுபோன்ற பயிற்சி விமானங்களின் பாதுகாப்பு மற்றும் அவசரகால நெறிமுறைகளில் DGCA இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஓம் சாந்தி."