கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டி; இந்தியாவின் பிரக்ஞானந்தாவுக்கு பின்னடைவு
அமெரிக்காவில் நடந்து வரும் கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியின் 2வது கிளாசிக்கல் ஆட்டத்தை இந்தியாவின் பிரக்ஞானந்தா டிரா செய்துள்ளார். இது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் நடந்து வரும் கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியின் 2வது கிளாசிக்கல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பாபியானோ கரானாவை எதிர்த்து விளையாடினார். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. இதனால், இருவருக்கும் தலா 3 புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
ஏற்கனவே, இரு தினங்களுக்கு முன்பு நடந்த முதல் கிளாசிக்கல் சுற்று ஆட்டத்தில் இருவரும் மோதிய போது, 48வது நகர்த்தலில் கரானா வெற்றி பெற்றார். இதனால், அவருக்கு 6 புள்ளிகள் வழங்கப்பட்டன.
தற்போது நடந்த 2வது கிளாசிக்கல் சுற்று ஆட்டம் டிரா ஆனதால், கரானா 9 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். பிரக்ஞானந்தா 3 புள்ளிகளுடன் பின்தங்கியுள்ளார். எனினும், மீதமுள்ள ராபிட் மற்றும் பிளிட்ஸ் சுற்றுகளில் பிரக்ஞானந்தான சிறப்பாக செயல்படும் பட்சத்தில், அவர் மீண்டு வந்து பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ளது.
மேலும்
-
டாஸ்மாக் கடைகள் அடைப்புமது பிரியர்கள் -'அப்செட்'
-
குன்னுாரில் மாவட்ட ஹாக்கி போட்டிகள் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
-
தமிழக எல்லைக்குள் வாகனங்கள் வர எதிர்ப்பு அரசியல் கட்சியினர் போலீசாரிடையே கடும் வாக்குவாதம்
-
பாக்., உளவு அமைப்புக்கு ராணுவ ரகசியங்களை கசியவிட்ட தம்பதி டில்லியில் அதிரடி கைது
-
சிறுபான்மையினர் சார்பு அரசு ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு
-
துணி கடையில் தீ