குன்னுாரில் மாவட்ட ஹாக்கி போட்டிகள் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

குன்னுார்: குன்னுாரில் 'ஹாக்கி யூனிட் ஆப் நீல்கிரீஸ்', இனியா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் நடந்தது.

மாவட்டத்தில் இருந்து, 28 அணிகள் பங்கேற்ற இப்போட்டிகள், ஏ.பி.சி., என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டன. விறு, விறுப்பாக நடந்த ஏ பிரிவு போட்டியில், நெப்டியூன் அணி முதலிடத்தையும், ஜிபிஎம் வாரியர் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

'பி' பிரிவில் ராப்டர் அணி முதலிடத்தையும், ஜெகதளா அணி இரண்டாம் இடத்தையும் கைப்பற்றின. அதேபோல், 'சி' பிரிவில் ஊட்டி கிரசன்ட் பள்ளி அணி முதலிடத்தையும், குன்னுார் ஜிபிஎம் ஜூனியர் அணி இரண்டாம் இடத்தையும் வென்றன.

'இனியா சுழற்கோப்பைக்கான' பரிசளிப்பு விழாவில், ஹாக்கி யூனிட் ஆப் நீல்கிரீஸ் அமைப்பு தலைவர் அனந்த கிருஷ்ணன், துணை தலைவர் சுரேஷ்குமார், சமூக சேவகி உஷா பிராங்கிளின், நேஷனல் ஜியோகிராபிக் ஒளிப்பதிவாளர் தீபக் மற்றும் தனியார் நிறுவனங்கள் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினர். இந்திரா நகர் பிரமுகர்கள் தனிநபர் பரிசுகளை வழங்கினர்.

அமைப்பின் பொருளாளர் ராஜா போட்டியை தொகுத்து வழங்கினார். நடுவர்களாக குட்டி, ரவி, கிரி, தினேஷ், சுமித்ராமன், சந்தோஷ், மணிகண்டன் ஆகியோர் பணியாற்றினர். ஏற்பாடுகளை இந்திரா நகர் இளைஞர் அணி, மகளிர் அணி, மூத்த ஹாக்கி வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Advertisement