கீழக்கரை மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

கீழக்கரை: கீழக்கரை மறவர் தெரு மகா மாரியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. கணபதி ஹோமம், லட்சுமி, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு அர்ச்சனை, நாடி சந்தானம் உள்ளிட்டவைகளுக்கு பிறகு கடம் புறப்பாடு நடந்தது.

கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். பின் மூலவருக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தலைவர் சந்திரசேகரன் மற்றும் கோயில் விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

Advertisement