இரவில் பஸ் வசதியின்றி கூடலுார் மக்கள் அவதி
கூடலுார், ஆக. 28-
கம்பத்திலிருந்து கூடலுாருக்கு இரவில் பஸ் வசதியின்றி மக்கள் அவதியுற்றுள்ளனர்.
கூடலுார் இரண்டாம் நிலை நகராட்சியாக உள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வளர்ந்து வரும் நகராட்சியாக இருந்த போதிலும் பத்திரப்பதிவு, உயர்தர சிகிச்சை, அரசு மருத்துவமனை, மொத்த கொள்முதல் உள்ளிட்ட தேவைகளுக்காக 8 கி.மீ., தூரமுள்ள கம்பத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் கம்பத்தில் உள்ள ஓட்டல், லாட்ஜுகள், வியாபார நிறுவனங்கள், ரெடிமேட் தையலகம் உள்ளிட்டவைகளில் கூடலுாரைச் சேர்ந்த ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் பணி முடிந்து திரும்புவதற்கு கம்பத்திலிருந்து இரவு 8 மணிக்கு மேல் போதிய பஸ் வசதியில்லை. தொலைதுாரத்தில் இருந்து நீண்ட நேர இடைவெளிக்குப் பின் வரும் பஸ்களில் கூட்ட நெரிசலில் சிக்கி ஊருக்கு வர முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் பலமுறை அரசுக்கும், போக்குவரத்துக் கழகத்திற்கும் புகார் தெரிவித்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இரவு 8 மணிக்கு மேல் 10 மணி வரை கூடலுார் வரை கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க அரசு முன் வரவேண்டும். இல்லாவிட்டால் கூடலுார் மக்கள் ஒருங்கிணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளதாக எச்சரித்துள்ளனர்.
மேலும்
-
இரண்டாவது கட்டமாக 37.5 டன் நிவாரண பொருட்களை நேபாளத்திற்கு அனுப்பியது இந்தியா
-
தென்பெண்ணை ஆற்றில் கழிவுர் தேக்கத்தால் துர்நாற்றம்
-
மேல்சிறுவளுர் கூட்ரோட்டில் பெங்களூரு செல்ல வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா
-
மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது
-
ரோட்டில் தவற விட்ட ரூ.2 லட்சம் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
-
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு நாளை 29ம் தேி சிறப்பு முகாம்