காரியாபட்டி அரசு பெண்கள் பள்ளியில் ரோட்டோரத்தில் சைக்கிள் ஸ்டாண்ட்
காரியாபட்டி:சைக்கிள் ஸ்டாண்ட் இல்லாமல் தவித்த காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு ரோட்டோரத்தில் இடம் ஒதுக்கி கொடுத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். உள்ளூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவிகளில் சைக்களில் வருகின்றனர். பள்ளியில் சைக்கிள் நிறுத்த இட வசதி கிடையாது. ஆங்காங்கே கடை ஓரங்கள், ரோட்டோரங்களில் நிறுத்தினர்.
இந்நிலையில் பள்ளி முன் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் இருந்தது. அதில் காய்கறி கடைகளை வைத்து ஆக்கிரமித்து வந்தனர். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதுடன், மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகினர். நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்பை அகற்ற முன்வந்தும் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அகற்ற முடியாமல் சிரமப்பட்டனர். இந்நிலையில் எஸ்.ஐ., வீரணன் முயற்சியில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பெரிய திருமால், ஆய்வாளர் கருப்பசாமி ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மீண்டும் ஆக்கிரமிக்காமல், மாணவிகள் சைக்கிள் நிறுத்த ஏதுவாக இரும்பு கர்டர் அமைக்கும் பணியை செய்தனர். இனி மாணவிகள் பாதுகாப்பாக பள்ளி முன் சைக்கிள் நிறுத்த முடியும் என்பதால் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும்
-
இரண்டாவது கட்டமாக 37.5 டன் நிவாரண பொருட்களை நேபாளத்திற்கு அனுப்பியது இந்தியா
-
தென்பெண்ணை ஆற்றில் கழிவுர் தேக்கத்தால் துர்நாற்றம்
-
மேல்சிறுவளுர் கூட்ரோட்டில் பெங்களூரு செல்ல வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா
-
மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது
-
ரோட்டில் தவற விட்ட ரூ.2 லட்சம் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
-
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு நாளை 29ம் தேி சிறப்பு முகாம்