நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்; அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

2


வாஷிங்டன்: நேபாள வெள்ளத்தில் சிக்கி 90 அமெரிக்கர்கள் மாயமாகி உள்ள நிலையில், அந்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் பனிப்பாறை உருகியதால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 390 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உள்பட 1,400க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தில் சிக்கி 90 அமெரிக்கர்கள் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது; வெள்ள பாதிப்புக்குள்ளான நேபாள நாட்டின் அரசை தொடர்பு கொண்டு பேசினாம். அப்போது, எந்த உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதியளிக்கப்பட்டது. எங்களுக்கு நேபாளத்துடன் நல்ல உறவு இருந்து வருகிறது. தற்போது, ஏற்பட்டுள்ள பேரழிவு மிகவும் கொடூரமானது. சேறும், நீரும் கலந்து வந்த வெள்ளத்தை இதுவரையில் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். பலமான கட்டடங்களைக் கூட வெறும் குச்சி போல அடித்துச் செல்லும் அளவுக்கு அது மிகவும் வலிமையானது.

50 முதல் 60 அமெரிக்கர்கள் இந்த வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இதுவரை முழுவிபரம் வரவில்லை. அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement