இக்கட்டான சூழ்நிலையில் உதவி; இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருகிறார் நேபாள பிரதமர்
நமது நிருபர்
பயணத்திற்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை; நேபாள பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவாகத்தான் இருக்கும் என அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே தெரிவித்தார்.
நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, பிரதமர் மோடி, நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நேபாளத்திற்குத் தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும், மீட்புப் பணிகளையும் வழங்க இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளதாகப் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அவசரகால நிவாரணப் பொருட்களை அனுப்பிய முதல் நாடு இந்தியாவாகும். சி-130ஜே (C-130J) விமானம் மூலம் முதற்கட்டமாக 10 டன் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்களை அனுப்பியது.
இந்நிலையில் நேபாள நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே கூறியதாவது: பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து நாங்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளோம்.
அவருடைய முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவிற்குத்தான் இருக்கும் என்பதில் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். அதற்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் இது நடக்கும் என்று நான் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
நேபாளத்தில் நடந்த துயரமான சம்பவம் நம்மை மிகவும் வருந்தம் அடைய வைத்துள்ளது ஆனால் இவன் மிகவும் ஆபதானவன் நேபாள மக்களே இவனை இப்போது மதிக்கவில்லை. நம்ம ஊர் கரப்பான் பூச்சி பார்ட்டி மாதிரி. அண்டை நாடுகளுடன் எப்பிடி நடந்துகொள்ள வேண்டும் என்ற பயிற்சி முக்கியம்.
ஒரு அணியும் பிடுங்க வேண்டாம்...மனிதாபிமான உதவிக்கு இந்தியாதான் எப்போதுமே முதலில் நிற்கும். நீங்கள் உங்க சீனா, rohinkiyaa, பாகிஸ்தான், வங்கதேசம் துடன் கள்ள உறவைப் பேணுங்க. முதுகில் குத்துதல் உங்களுக்கு என்ன புதுசா? ஏன் இந்த திடீர் கள்ள பாசம் எங்க நாட்டின் மீது?
சீனாவ கூல் பண்ண நேபாளுடன் இந்தியப் பகுதிகளைச் சேர்த்து மேப் போட்டாய்ங்க .... இப்போ இந்தியா கிட்டயே பிச்சை ....
இப்ப இந்தியா பக்கம் வரான் இந்த ஜென்ஜி ரோமம்.
எப்பவும் இந்தியாடா.
இந்தியாவை எதிர்த்து சீனுவுடன் சேர்ந்து அரசியல் செய்தான். இப்பொது நிலைமை புரிய ஆரம்பித்து உள்ளது.மேலும்
-
எல்லாம் ஒரு விளம்பரந்தான்! விளம்பர நிறுவன நிதியில் பஸ் ஸ்டாப் : மாநகராட்சி முயற்சிக்கு 'புல்ஸ்டாப்'
-
லஞ்சத்தை ஒழிக்க பின்பற்ற வேண்டிய நடைமுறை: வேகமாக பரவும் கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு
-
'ட்ரீம்' திருப்பூர்! ஜென்ஸி காட்டும் வழி
-
5 நாட்களாக நடக்கும் மீட்புப்பணி: மாயமான 3,000 பேர் கதி என்ன?
-
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவிவசாயிகள் எதிர்ப்பு: வனவிலங்குகளுக்கும் ஆபத்து என புகார்
-
கிரைம் செய்திகள்: மேட்டுப்பாளையம்