ஏரியின் பெயரை மாற்றினார் டிரம்ப்; கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு

ஒட்டாவா: ஒன்டாரியோ ஏரிக்கு, “அமெரிக்கா ஏரி” எனப் பெயர் மாற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவை கனடா பிரதமர் மார்க் கார்னி நிராகரித்துள்ளார்.

கனடாவுடனான தனது வர்த்தக போரை தீவிரப்படுத்தும் விதமாக, ஒன்டாரியோ ஏரிக்கு அமெரிக்காவில் 'லேக் அமெரிக்கா' என பெயர் மாற்றப்படுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இந்த உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

இந்த பெயர் மாற்றம் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ வரைபடங்கள், ஆவணங்கள் மற்றும் தரவுத்தளங்களுக்கு மட்டுமே பொருந்தும்; இந்த ஏரி இரு நாடுகளுக்கும் பொதுவானது என்பதால், கனடா அரசு மற்றும் சர்வதேச அமைப்புகள் இந்த பெயர் மாற்றத்தை ஏற்கப் போவதில்லை, தங்களுக்கு அது எப்போதும் 'ஒன்டாரியோ ஏரி' தான் என கனடா தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒன்டாரியோ ஏரிக்கு, “அமெரிக்கா ஏரி” எனப் பெயர் மாற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவை கனடா பிரதமர் மார்க் கார்னி நிராகரித்துள்ளார். இது குறித்து மார்க் கார்னி கூறியதாவது: ஒன்டாரியோ ஏரி என்ற பெயர் பொருத்தமானது, அழகானது. இந்தப் பெயர் 400 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது; இது கனடாவின் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்கா பெயரை மாறிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம்.

அவர்களின் வர்த்தக உறவுகள், வெளியுறவுக் கொள்கைகள், தேசிய நினைவுச்சின்னங்கள், நீர்நிலைகளின் பெயர்கள் என அனைத்தும் மாறுகின்றன. யதார்த்தத்திற்குப் பெயரிடுவது என்பது, அப்போதும், இப்போதும், எப்போதும் அதை ஒன்டாரியோ ஏரி என்று அழைப்பது தான் கனடா மக்களுக்கு தெரியும். இவ்வாறு மார்க் கார்னி கூறியுள்ளார்.

Advertisement