வாரியத்தின் ரூ.10 லட்சம் மின் சாதன பொருட்கள் திருடிய 3 பேர் சிக்கினர்
மதுரவாயல்: மின்வாரிய பணிக்காக வைத்திருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் திருடிய, மூவரை போலீசார் கைது செய்தனர்.
எருக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் கணேசன், 56. இவர், தமிழக மின்சார வாரியத்தில் ஒப்பந்தம் எடுத்து, மதுரவாயல், ஆற்காடு சாலை, ஏ.ஆர்.எஸ்., கார்டன் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வந்தார்.
கடந்த 19ம் தேதி பணியை முடித்து சென்ற அவர், 23ம் தேதி காலை மீண்டும் பணிக்கு வந்தார்.
அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த ‘கன்ட்ரோல்’ கேபிள், பேட்டரி, மின்சாதனங்கள் மற்றும் மின் புதைவட பொருட்கள் உள்ளிட்ட 10 லட்சம் ரூபாய் வரை மதிப்பிலான பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.
புகாரின்படி, மதுரவாயல் போலீசார் விசாரித்ததில், வளசரவாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 26, ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், 26, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
திருடிய பொருட்களை அருகில் உள்ள பழைய பொருட்கள் வாங்கும் கடையில் விற்று பணத்தை செலவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து பொருட்களை வாங்கிய கடைக்காரரான வளசரவாக்கத்தைச் சேர்ந்த கலுங்கு சுடலை, 25, என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும்
-
லைட் ரீடிங்... களைகட்டிய கலைத்திருவிழா போட்டிகள் இசை, நடனம், நாடக திறமைகளை வெளிப்படுத்தி பள்ளி மாணவர்கள்
-
புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு சேவை உரிமை ஆவண திட்டம் செப். 1ல் அமல்
-
கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்
-
டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவர் பலி; இருவர் காயம்
-
2 மாதங்களில் 731 சாலை விபத்து 1,204 பேருக்கு அவசர சிகிச்சை
-
டவுன் பஸ் இயக்கக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்