அரிச்சுவடி சேர்மனுக்கு மலர் அஞ்சலி
புதுச்சேரி: அரியாங்குப்பம், அரிச்சுவடி மனநல மையத்தின் சேர்மன் ராஜகோபாலன் 6ம் ஆண்டு நினைவு அஞ்சலி நேற்று நடந்தது.
மணவெளி, திரவுபதியம்மன் கோவில் அருகே அலங்காரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு, ராமு எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று மலர் அஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றம் அன்னதானம் வழங்கினார்.
இதில், ரோட்டரி கிளப் ஆப் அரிக்கமேடு போர்ட் தலைவர் ராமச்சந்திரன், முன்னாள் தலைவர் சதீஷ்குமார், முன்னாள் பொருளாளர் கோதை சதீஷ்குமார், ரோட்டரி துணை தலைவர் நவசக்தி, டாக்டர் கலையரசி, வெண்ணிலா, புருஷோத்தம்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உறவினர்கள், அரிச்சுவடி மற்றும் ஆத்திச்சூடி ஊழியர்கள், நண்பர்கள் செய்திருந்தனர்.
முன்னதாக, அரியாங்குப்பம், மணவெளி திலகர் வீதியில் அவரை நல்லடக்கம் செய்த இடத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆத்ம தீபம் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும்
-
கிர்கிஸ்தானில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கிறார் பிரதமர் மோடி
-
இன்று தேர்தல் நடந்தாலும் தேஜ கூட்டணி 326 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பு; கருத்துக்கணிப்பில் தகவல்
-
நேபாளத்தில் பணியாற்றிய இந்தியர்கள் 63 பேர் பத்திரமாக மீட்பு; பெயர் பட்டியல் வெளியீடு
-
இக்கட்டான சூழ்நிலையில் உதவி; இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வருகிறார் நேபாள பிரதமர்
-
நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்; அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
ஏரியின் பெயரை மாற்றினார் டிரம்ப்; கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு