38 பவுன் நகை மாயம்

சாத்துார்:சாத்துார் மேட்டமலையை சேர்ந்தவர் செல்வராஜ் 55. அப்பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். ஆகஸ்ட் 26 காலையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பீரோவில் தான் மற்றும் அவரது மனைவி அணிந்திருந்த நகைகளை கழட்டி வைத்துள்ளார்.பின்னர் மாலையில் மற்றொரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பீரோவை திறந்து நகையை தேடிய போது பீரோவில் இருந்த 38 பவுன் நகை மாயமானது தெரியவந்தது. . சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement