நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்; சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு நோட்டீஸ்

14


சென்னை: நேபாள வெள்ளத்தில் தமிழர்கள் சிக்கியது தொடர்பாக எதிர்க்கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு கொண்டு வரப்பட்டது. அப்போது, தமிழர்களை மீட்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வலியுறுத்தினார்.

நேபாளம் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் சிக்கியு விவகாரம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன், முக்கிய தகவலை சொல்ல முயன்றார். ஆனால், அதற்கு, திமுக, அதிமுக மற்றும் பாமக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் தான் முதலில் பேச வேண்டும் என்று கோஷமிட்டனர். இதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர் பேசிய பிறகே அனுமதியளிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

அப்போது, மரபை மீறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்த சபாநாயகர், "கரூர் சம்பவத்தில் முதல்வர் பேசிய பிறகே, எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்கப்பட்டது. மரபு ஏதும் மீறப்படவில்லை," எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, "நாங்கள் அரசை ஏதும் குறை சொல்லவில்லை. அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். எங்களை பேச அனுமதிக்கவில்லை எனில், நாங்கள் எதற்கு சட்டசபைக்கு வரவேண்டும்," என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நேபாள வெள்ளத்தில் தமிழர்கள் சிக்கியது தொடர்பாக எதிர்க்கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு நோட்டீஸை கொண்டு வந்தனர்.

பிறகு, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியதாவது; நேபாளம் சென்றுள்ள குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று இங்குள்ள அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த பதற்றத்திலும், அச்சத்திலும் இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர்? எத்தனை பேரை மீட்டெடுத்துள்ளோம்? அரசு அறிவித்த உதவி எண்ணிற்கு எத்தனை பேர் தொடர்பு கொண்டுள்ளனர்? அந்த அழைப்புகள் தொடர்பாக என்ன மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாரா?

ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதிசிவஞானம் பாதிக்கப்பட்டுள்ளதா செய்திகள் வெளியாகியுள்ளது. திமுக சார்பில் மத்திய அமைச்சருக்கு விரிவான கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும், எனக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது; நேபாளத்திற்கு கைலாஷ் யாத்திரை சென்ற 103 தமிழர்கள் மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 384 பயணிகள் காணாமல் போகியுள்ளனர். அவர்களில் 291 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். 93 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். 209 பேரை மீட்டுள்ளனர். 35 வாகனங்கள் செல்லும் பாலங்களும், 45 தொங்கும் பாலங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. குடிவரவு அலுவலர்களை தொடர்பு கொள்வதே பெரும் சவாலாக உள்ளது. மீட்பு பணி மற்றும் மருத்துவ உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.


தஞ்சாவூரில் உள்ள சுற்றுலா நிறுவனத்தின் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 54 பேரும், புதுச்சேரியில் இருந்து 3 பேரும் நேபாளம் சென்றுள்ளனர். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் விஜய் தலைமையில் அவசரக் கூட்டம் நடைபெற இருக்கிறது, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement