நேபாளத்தில் தமிழர்கள் 21 பேர் மீட்பு: விவரங்களை வெளியிட்டது மத்திய வெளியுறவு அமைச்சகம்
புதுடில்லி: நேபாளத்தில் தமிழகத்தை சேர்ந்த 21 பேர் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அவர்களின் விபரத்தையும் வெளியிட்டு உள்ளது.
டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: நேபாளத்தில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மன்சரோவர் யாத்திரை சென்று சீனாவில் சிக்கி உள்ள இந்தியர்கள் குறித்த தகவல்களை பெற்று உள்ளோம். வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து மீட்க வேண்டும் என சுமார் 200 இந்தியர்கள் உதவி கோரி உள்ளனர். அவர்களில் 95 பேர் கார்சான் பகுதியில்( திபெத்) உள்ளனர். அவர்கள் நேபாளத்தை கடக்க பில்சா பகுதியை நோக்கி வந்து கொண்டு உள்ளனர். 13 பேர் ஜூடுல்போ ( திபெத்)நகரத்திலும் உள்ளனர். அவர்கள் சஹா நகரை நோக்கி வந்து கொண்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மீட்கப்பட்ட தமிழர்களின் விவரம்
01. தியாகராஜன் (சிதம்பரம்)
02. கிருபாகிரி (சிதம்பரம்)
03. கனகசபை (பெங்களூரு)
04. ராதை (பெங்களூரு)
05. ரகுநாதன் (ஓசூர்)
06. மணிமேகலை (மயிலாடுதுறை)
07.பழனியப்பன் (சிதம்பரம்)
08.கலைமதி (சிதம்பரம்)
09. ரத்தினகுமார் (மயிலாடுதுறை)
10. பூங்குழலி (மயிலாடுதுறை)
11. வள்ளிநாயகி (திருச்சி)
12. முத்துக்குமரேசன் (சிதம்பரம்)
13. மைதிலி (சென்னை)
14. நாவு கபீர்தாஸ் (சென்னை)
15. விஜயபுவனேஸ்வரி (சிதம்பரம்)
16. சிவரஞ்சனி (திருச்சி)
17. சாந்தி (சிதம்பரம்)
18. கற்பகம் (திருச்சி)
19. மாறன் (சிதம்பரம்)
20. திருமாவளவன் (நெய்வேலி)
21. சத்தியா (காஞ்சிபுரம்) ஆகியோர் நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.
288 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை
ரந்தீர் ஜெயிஸ்வால் மேலும் கூறியதாவது:
இந்தியா அனுப்பி வைத்த நிவாரண பொருட்கள் காத்மாண்டுவை அடைந்துள்ளது. அதில் 8 டன் மருந்து பொருட்களும், ஒரு டன் உணவு பொருட்களும் என நேபாளத்தில் நடக்கும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்தியா 47.5 டன் அவசரகாலங்களில் உதவும் பொருட்களை இந்தியா அனுப்பி உள்ளது.
நேபாள பிரதமரை தொடர்பு கொண்ட நமது பிரதமர் மோடி, இரங்கல் தெரிவித்துள்ளதுடன், நேபாள மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் என உறுதி அளித்து உள்ளார். இன்னும் 288 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளோம். அவர்களில் 73 பேர் திரிசுலி மின் திட்டத்தில் பணியாற்றுபவர்கள். காத்மாண்டுவில் உள்ள நமது தூதரகம் வாயிலாக திட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்களின் விவரங்களை அறிய முயற்சி செய்கிறோம்.
திரிசூலி மின் திட்டத்தில் பணிபுரியும் 73 பேர் தவிர்த்து, சாம்ராட் மற்றும் ப்ளை எவரெஸ்ட் டிராவல்ஸ் வாயிலாக கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த 37 மற்றும் 49 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் சிக்கி உள்ளனர்.
ரசுவா மாவட்டத்தில் உள்ள திமுரேவுக்கு சாம்ராட் டிராவல்ஸ் உதவியுடன் மேற்கு வங்கத்தை சேர்ந்த 32 இந்தியர்கள், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 61 பேர், கேரளாவை சேர்ந்த33 பேர் கொண்ட குழு என மொத்தம் ஐந்து குழுக்களில் 288 பேர் நேபாளத்தில் சிக்கி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
wrong time to go to nepalமேலும்
-
இரண்டாவது கட்டமாக 37.5 டன் நிவாரண பொருட்களை நேபாளத்திற்கு அனுப்பியது இந்தியா
-
தென்பெண்ணை ஆற்றில் கழிவுர் தேக்கத்தால் துர்நாற்றம்
-
மேல்சிறுவளுர் கூட்ரோட்டில் பெங்களூரு செல்ல வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா
-
மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது
-
ரோட்டில் தவற விட்ட ரூ.2 லட்சம் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
-
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு நாளை 29ம் தேி சிறப்பு முகாம்