தென்பெண்ணை ஆற்றில் கழிவுர் தேக்கத்தால் துர்நாற்றம்
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் துர்நாற்றம் வீசுவதால் மேம்பாலத்தில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் தற்பொழுது தண்ணீர் இல்லாததால் ஒரு பகுதி வறண்டு காணப்படுகிறது. ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் உள்ளது.பாலத்தின் மேற்கு பகுதி தண்ணீர் இல்லாமல் உள்ளது.பாலத்தின் கிழக்கு பகுதி கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலக்கிறது.
இதனால் பாலித்தின் ஒரு பகுதி முழுக்க கழிவுநீர்தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது.கடந்த 15 நாட்களுக்கு முன்பு தென்பெண்ணை ஆற்றில் விடப்பட்ட கழிவு நீர் மூலம் ஆற்றில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. இந்த கழிவு நீரை கால்நடைகள் குடித்தால் மயங்கி விழுந்து இறக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும்
-
நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்; அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
ஏரியின் பெயரை மாற்றினார் டிரம்ப்; கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு
-
கிராண்ட் செஸ் டூர்; முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா
-
வெள்ளிக்கிழமைகளில் தேங்காய் தொட்டி ஏலம்
-
நகராட்சி அலுவலர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம்
-
மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மக்கள்