இரண்டாவது கட்டமாக 37.5 டன் நிவாரண பொருட்களை நேபாளத்திற்கு அனுப்பியது இந்தியா
புதுடில்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள நேபாளத்திற்கு இரண்டாவது கட்டமாக 37.5 டன் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு தேவையான பொருட்களை மத்திய அரசு அனுப்பி வைத்து உள்ளது. இவை நேபாளம் சென்றடைந்தது.
வெள்ளப்பெருக்கு காரணமாக உருக்குலைந்து காணப்படும் நேபாளத்திற்கு இந்தியா சார்பில் நேற்று உடனடியாக 10 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில், இரண்டாவது கட்டமாக இன்று 37.5 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நேபாளம் சென்றடைந்த இப்பொருட்கள், அந்நாட்டு அறிவியல் , தொழில்நுட்பத்துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் உதவிக்கரம் தொடர்கிறது. 37.5 டன் நிவாரண பொருட்கள் நேபாளத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. அந்நாட்டிற்கும், அந்நாட்டு மக்களுக்கும் உதவ இந்தியா உறுதி பூண்டுள்ளது எனத் தெரிவித்து உள்ளது.
இரண்டு கட்டமாக இதுவரை 47.5 டன் நிவாரண பொருட்களை நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வளவு உதவிகளையும் நேபாளம் பெற்றுக்கொண்டு, நாளைக்கு சைனாவுக்கு வாலாட்டி நிற்கும்.மேலும்
-
நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்; அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
ஏரியின் பெயரை மாற்றினார் டிரம்ப்; கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு
-
கிராண்ட் செஸ் டூர்; முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா
-
வெள்ளிக்கிழமைகளில் தேங்காய் தொட்டி ஏலம்
-
நகராட்சி அலுவலர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம்
-
மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மக்கள்