மேல்சிறுவளுர் கூட்ரோட்டில் பெங்களூரு செல்ல வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மேல்சிறுவளுர் கூட்ரோட்டில் மாநில தேசிய நெடுஞ்சாலையில் வழிகாட்டி பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த மேல்சிறுவளுர் கூட்ரோட்டில் தர்மபுரி, பெங்களூர் செல்லும் சாலையில் வழிகாட்டி பலகை வைக்காததால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வழி தெரியாமல் தவிக்கின்றனர்.

தற்போது இப்பகுதியில் மாநில நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வழிகாட்டி பலகை இருக்கிறது. ஆனால் வலையும் இடத்தில் வழிகாட்டி பலகை இல்லாமல் இருக்கிறது.பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக மேல் சிறுவலுார் கூட்டு ரோட்டில் தானிபாடி செல்லும் சாலையில் தர்மபுரி, பெங்களூரு செல்லும் சாலைக்கான வழிகாட்டி பலகையை வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement