ரோட்டில் தவற விட்ட ரூ.2 லட்சம்: போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
பண்ருட்டி:பண்ருட்டியில் பைக்கில் இருந்து தவறி விழந்து ரூ.2 லட்சம் பணத்தை போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
கடலுார் மஞ்சக்குப்பம் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சத்யநாராயணன்,32; தனியார் ஒட்டல் மேலாளரான இவர், நேற்று முன்தினம், தனது திருமண செலவிற்காக, பண்ருட்டி பொன்னுசாமி தெருவில் உள்ள ஒருவரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கினார். அந்த பணத்தை தனது பைக் பெட்டியில் வைத்துக் கொண்டு கடலுாருக்கு புறப்பட்டார்.
சற்று நேரத்தில் பைக் பெட்டி திறந்திருந்தது. அதில் இருந்த பணத்தை காணாமல் திடுக்கிட்டார். வந்த வழியில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சத்தியநாராயணன் அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் கடலுார் சாலையில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் கிடைத்த தகவலின் பேரில், கீழே விழுந்த பணத்தை எடுத்த நபரிடம் இருந்து பணத்தை பெற்று, சத்யநாராயணனிடம், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஒப்படைத்தார்.
மேலும்
-
நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்; அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
ஏரியின் பெயரை மாற்றினார் டிரம்ப்; கனடா பிரதமர் மார்க் கார்னி கடும் எதிர்ப்பு
-
கிராண்ட் செஸ் டூர்; முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா
-
வெள்ளிக்கிழமைகளில் தேங்காய் தொட்டி ஏலம்
-
நகராட்சி அலுவலர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம்
-
மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மக்கள்