மதுபாட்டில் கடத்தல்: 2 பேர் கைது

விழுப்புரம்: மயிலம் அருகே புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலம் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு ஐவேலி முருகன் கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், வந்தவர்கள் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில், பேரணி அடுத்த கெண்டியாம்பாக்கம் திருநாவுக்கரசு, 42; புதுச்சேரி மாநிலம், மண்ணாடிப்பட்டு சுரேஷ், 47; என்பதும் தெரியவந்தது. உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து 269 மது பாட்டில்கள் மற்றும் புதுச்சேரி மாநில பாக்கெட் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement