இளம் தலைமுறையினர் போராட்டம் விவகாரம்; மத்திய அரசின் முடிவைப் பாராட்டிய சசி தரூர்
புதுடில்லி: மத்திய கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற இளம் தலைமுறையினரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசின் முடிவை காங்கிரஸ் எம்பி சசிதரூர் பாராட்டி உள்ளார்.
இது குறித்து ஆங்கில செய்தி சேனல் நடத்திய நிகழ்ச்சியில் சசி தரூர் பேசியதாவது: வெவ்வேறு நாடுகளில் நடக்கும் போராட்டங்கள் அந்தந்த நாடுகளின் அரசியல் அமைப்பையும், அந்தச் சூழ்நிலைகளை அரசுகள் எதிர்கொள்ள அல்லது நிராகரிக்க முயன்ற அணுகுமுறையையும் பிரதிபலிக்கிறது.
இந்தியாவின் ஜனநாயக அமைப்பு மாணவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கும் நிலையில் உள்ளது. இளம் தலைமுறையினரின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மியான்மர் மற்றும் பாகிஸ்தான் முதல் இலங்கை, வங்கதேசம், நேபாளம் மற்றும் இந்தியா வரையிலான தெற்காசியா முழுவதும், இளம் தலைமுறை தலைமையிலான போராட்டங்கள் பல்வேறு எழுச்சிகளுக்கு வழிவகுத்துள்ளன.
மற்ற நாடுகளைப் போலல்லாமல், இந்தியாவில் மக்கள் மற்றும் இளைஞர்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்கும் நெறிமுறையை கொண்டுள்ளது. மாணவர்களின் போராட்டங்களுக்குப் பிறகு அமைச்சர் பதவி விலகியது போன்ற நிகழ்வுகள், இந்திய ஜனநாயகத்தின் பலத்தை எடுத்துரைக்கிறது. இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சசிதரூர் கூறினார்.
ராகுல் அய்யாவுக்கு வயிறெரியுமே ?மேலும்
-
இரண்டாவது கட்டமாக 37.5 டன் நிவாரண பொருட்களை நேபாளத்திற்கு அனுப்பியது இந்தியா
-
தென்பெண்ணை ஆற்றில் கழிவுர் தேக்கத்தால் துர்நாற்றம்
-
மேல்சிறுவளுர் கூட்ரோட்டில் பெங்களூரு செல்ல வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா
-
மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது
-
ரோட்டில் தவற விட்ட ரூ.2 லட்சம் போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
-
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு நாளை 29ம் தேி சிறப்பு முகாம்