பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்தவில்லை: தேர்தல் வழக்கில் முதல்வர் விஜய் மனு

7

சென்னை: பிரசாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தவில்லை. வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் முதல்வர் விஜய் மனு தாக்கல் செய்துள்ளார்.

முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் வாக்காளர்கள் லட்சுமி நரசிம்மன், தினேஷ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.


திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.


இந்த வழக்கு கடந்த 25ம் தேதி விசாரணைக்கு வந்த போது, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக்கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும்,அதற்கு இரண்டு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என முதல்வர் விஜய் தரப்பில் கேட்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் இன்று( ஆக.,27)க்குள் தேர்தல் வழக்கு நிராகரிக்கக்கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.



இந்நிலையில், முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனுவில், குழந்தைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறு. இதற்காக எனது வெற்றியை செல்லாது என அறிவிக்க இயலாது. செலவு கணக்கு, வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும், வழிபாட்டு தலங்களில் பிரசாரம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் இல்லை எனத் தெரிவித்து உள்ளார்.

Advertisement