உற்பத்தி, ஏற்றுமதிக்கான சர்வதேச மையமாக மாறும் இந்தியா: நிர்மலா சீதாராமன்

1

டொரோன்டா : உற்பத்தி, ஏற்றுமதி, சேவைக்கான சர்வதேச மையம் ஆக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

கனடா சென்றுள்ள நிர்மலா சீதாராமன் டொரோன்டோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: இந்தியா வளர்ந்து வரும் சந்தை மட்டும் இல்லை. சர்வதேச உற்பத்தி, புதுமை, சேவை மற்றும் ஏற்றுமதிக்கான மையம் ஆக மாறி வருகிறது. சீர்திருத்தங்கள், டிஜிட்டல் மயம், உள்கட்டமைப்பில் முதலீடு, கொள்கை ஆதரவு ஆகியன நீண்ட கால முதலீட்டுக்கான சூழ்நிலையை வலுப்படுத்தி வருகின்றன.

கனடாவை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், இந்தியாவை வெறும் முதலீட்டுக்கான இடமாக மட்டும் பார்க்காமல், சர்வதேச வளர்ச்சிக்கான கூட்டாளி ஆகவும் பார்க்க வேண்டும். சர்வதேச சந்தைகளில் இந்தியா பரந்து செயல்படும் வகையில் நீண்ட கால செயல்பாடு மற்றும் ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

Advertisement