கிராண்ட் செஸ் டூர்; முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்து வரும் கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியின் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம், கிராண்ட் செஸ் டூரில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடந்த கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியின் முதல் இரு கிளாசிக்கல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் பாபியானோ கரானாவை விட, இந்திய வீரர் பிரக்ஞானந்தா 9-3 என்ற புள்ளிகள் கணக்கில் பின்தங்கியிருந்தார். இருப்பினும் மீதமுள்ள ராபிட் மற்றும் பிளிட்ஸ் சுற்றுகளில் பிரக்ஞானந்தா சிறப்பாக செயல்படும் பட்சத்தில், அவர் பட்டத்தை வெல்ல வாய்ப்பிருந்தது. இதனால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இந்த நிலையில், ராபிட் சுற்று ஆட்டங்களில் அமெரிக்க வீரர் கரானாவை எதிர்த்து விளையாடிய பிரக்ஞானந்தா, சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று, முன்னிலை பெற்றார். பின்னர், நடந்த பிளிட்ஸ் ஆட்டங்களை அவர் டிரா செய்தார். இதனால், புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இறுதியில், 15-13 என்ற கணக்கில் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன்மூலம், கிராண்ட் செஸ் டூரில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு சுமார் ரூ.1.90 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
மூன்றாம் இடத்திற்கான போட்டியில் ஜெர்மனியைச் சேர்ந்த வின்சென்ட் கீமரை வீழ்த்தி, பிலிப்பைன்ஸ்-அமெரிக்க வீரர் வெஸெலி பார்போஸா வெற்றி பெற்றார்.
வாழ்த்துக்கள். இந்தியாவுக்கே இது பெருமை.
வாழ்வில் இன்னும் பல சாதனைகளை படைத்து வெற்றி பெற்று வாழ்க பல்லாண்டு காலம்.
பிராக் அணியும் விபூதிக்காக விஷத்தை கக்கிய திராவிடியா மாடல் அரசு வெட்கப்பட வேண்டும்
True stature lies not in the e one belongs to, but in the values, vision and impact one leaves behind
தமிழ் மகன், பிரஃஞாநந்தா, அகில உலகளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளார். இப்போதாவது அவருடைய சாதனைகளை தமிழக அரசு உணர்ந்து தகுந்த அளவில் பாராட்டி பெருமை சேர்க்க வேண்டும் . வாழ்க , வளர்க்க, மேலும் மேலும் சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.
திராவிட மாடல் அரசின்போது இவருக்கு உரிய மதிப்பு அங்கிகாரமே கொடுக்க வில்லை ஏனென்றால் இவருடய ஜாதியை பார்த்து இவருக்கு முன்னிரிமை அல்லது இவரை புகழவே இல்லை ஆனால் இயற்கை இதுவரை விடாமல் கைகொடுத்தது இந்தியாவிற்கே நன்மதிப்பை பெற்றுக்கொடுத்திருக்கிறார் நமது முதல்வர் விஜய் யாவது இவரை புகழ்ந்து பாராட்ட வேண்டும்
எங்கள் விஜய் தான் ட்ரைனிங் கொடுத்தார்,
இந்தியர்கள் எல்லா துறைகளிலும் வல்லவர்கள். ஆனால் பாழா போன இட ஒதுக்கீடு கொள்கைகளால் அவர்கள் மழுங்கடிக்க படுகிறார்கள்மேலும்
-
தொடரை வென்றது இங்கிலாந்து: பாகிஸ்தான் அணி மீண்டும் தோல்வி
-
'கவுன்டி' அணியில் அகிப் நபி: நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு தயாராக
-
கிழக்கு மண்டல அணி அபாரம்: துலீப் டிராபி அரையிறுதியில்
-
இந்திய அணியில் இடம்: மனம் திறக்கிறார் சூர்யகுமார்
-
ஜெர்மனி மீண்டும் சாம்பியன்: உலக கோப்பை ஹாக்கியில் கலக்கல்
-
பெடரருக்கு கவுரவம்: 'ஹால் ஆப் பேம்' பட்டியலில் இடம்