வெள்ளிக்கிழமைகளில் தேங்காய் தொட்டி ஏலம்

ஈரோடு:பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில், தேங்காய் தொட்டி ஏலம் இன்று (28) முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை காலை, 11:00 மணிக்கு நடத்தப்படுகிறது.
பெருந்துறை, ஈரோடு சாலை வாரச்சந்தை அருகே உள்ள பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் ஏலம் நடக்கும். சங்க ஏல விதிப்படி ஏலம் நடைபெறும். விவசாயிகள், தங்களது தேங்காய் தொட்டிகளை சங்கத்தின் அனைத்து வேலை நாட்களிலும் காலை, 9:00 முதல் மாலை, 6:00 மணி வரை சங்கத்துக்கு கொண்டு வரலாம்.
ஏலத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் தங்களது ஆதார் கார்டு நகல், வங்கி புத்தக நகல் ஆகியவை எடுத்து வர வேண்டும். கூடுதல் விபரத்தை, 63792 67809, 86681 80587 என்ற எண்களில் அறியலாம்.

Advertisement