நகராட்சி அலுவலர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம்

கரூர்:தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் நேற்று ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருவூலம் மூலம் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியிட மாறுதல், பதவி உயர்வு மாறுதல் ஆகியவற்றை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும். பணி நேரம் முடிந்து மற்றும் விடுமுறை நாட்களில் ஆய்வு கூட்டம் நடத்தக் கூடாது என வலியுறுத்தி, ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், புகழூர் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் அலுவலர்கள், பில் கலெக்டர்கள் உள்ளிட்ட பெரும்பாலான அலுவலர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால், நகராட்சி வரிவசூல் மையம், நகராட்சி உள் அலுவலகம் பணியாளர்கள் வருகையின்றி வெறிச்சோடியது. இதனால் வரி செலுத்த வந்தவர்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ் வாங்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வழக்கமான அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.

Advertisement