ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

மதுரை: மதுரை நகர் ஊர்க்காவல்படையில் ஆண்கள் 42, பெண்கள் 5, என மொத்தம் 47 காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு ஆயுதப்படை மைதானத்தில் செப்.23ல் நடைபெறும். மதுரையில் வசிக்கும் 20  முதல் 45 வயதிற்குட்பட்ட நல்ல உடற்தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சி / தேர்ச்சியின்மை பெற்றிருக்கலாம். ஆண்களுக்கு  உயரம் 165 செ.மீ., பெண்களுக்கு உயரம் 155 செ.மீ., இருக்க வேண்டும். என்.சி.சி., விளையாட்டு வீரர்களுக்கு  முன்னுரிமை உண்டு. விருப்பம் உள்ளவர்கள் தேர்வில் பங்கேற்க மாற்றுச்சான்று, மதிப்பெண் பட்டியல், ஜாதிசான்று, 2 பாஸ்போர்ட் அளவு போட்டோக்களுடன் வர வேண்டும். 

தல்லாகுளம் கோகலே ரோடு ஊர்க்காவல்படை அலுவலகத்தில் செப்.1 முதல் செப்.7 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். சமர்ப்பிக்க செப்.10 கடைசி நாள்.

Advertisement